சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினி ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். புவனேஷ் என்ற அந்நபர் ஏற்கெனவே புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கும் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தை நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட புவனேஷ், முதல்வர், ரஜினி இல்லங்கள் மட்டுமல்லாது மேலும் சில முக்கியப் பிரமுகர்களின் வீடுகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். அவர் பயன்படுத்திய கைபேசி எண்ணை வைத்து போலிசார் துரித கதியில் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து விழுப்புரத்தைச் சேர்ந்த புவனேஷ் கைது செய்யப்பட்டார்.
முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
1 mins read

