சென்னை: திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்படுவதை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விரும்பவில்லை என்றும், இதன் காரணமாக கட்சித் தலைமை மீது அவர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உதயநிதிக்கு எதி ராக அவர்கள் போர்க்கொடி உயர்த்த தயாராகி வருவதாகவும் தமிழக ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது.
அண்மைக் காலமாக அரசியல் களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறார் உதயநிதி. திமுகவில் உள்ள சரிபாதி மாவட்ட செயலர் கள் அவருக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை இம்மாவட்ட செய லர்கள் பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வேலை வாய்ப்பு, ரத்த தான முகாம்கள் நடத்துவது எனப் பல்வேறு வகை யிலும் உதயநிதியை முன்னிலைப் படுத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதே சமயம் மாவட்ட செய லர்கள், நிர்வாகிகளில் மற்றொரு தரப்பினர் உதயநிதிக்கு இவ்வாறு முக்கியத்துவம் அளிப்பதை விரும் பவில்லை எனக் கூறப்படுகிறது.

