நரபலி கேட்கிறது 'நீட்' தேர்வு: மு.க.ஸ்டாலின் காட்டம்

நரபலி கேட்கிறது 'நீட்' தேர்வு: மு.க.ஸ்டாலின் காட்டம்

1 mins read

சென்னை: 'நீட்' தேர்வை நரபலி யுடன் ஒப்பிட்டு காட்டத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின். ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விடுதலை கிடைக்க சட்ட ரீதியான போராட்டங்களை ஆட்சி யாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். ஆனால் மத்திய அரசின் தலையாட்டிப் பொம்மைகளாகச் செயல்படும் தமிழக ஆட்சியாளர்க ளால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சம் ஏற்ப டுவதாக ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.

"நீட் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் ஒதுக்கி, தமிழக மாணவர்களையும் அவர்க ளுக்குத் துணையாக சென்ற பெற்றோரையும் அலைக்கழிக்கச் செய்து, மன உளைச்சலுக்குள் ளான கொடூரத்தால் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியை இந்த ஆண்டு பறிகொடுத்துள்ளோம். " தி ரு த் து றை ப் பூ ண் டி யை ச் சேர்ந்தவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால், மாணவரும் அவரது தந்தையும் மன உளைச் சலுக்குள்ளாகி இருக்கிறார்கள். "இந்த நிலையில், எர்ணாகுளம் நாளந்தா பள்ளியில் நீட் தேர்வை அந்த மாணவர் எழுதிக்கொண் டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் அவரது தந்தை கிருஷ்ணசாமி," என்று ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.