திருமாவளவன்: பாஜகவை மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதே முக்கிய சவால்

திருமாவளவன்: பாஜகவை மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதே முக்கிய சவால்

1 mins read
561fb8e0-3052-47bb-abbc-82d6c5a70635
-

சென்னை: தற்போதைய சூழலில் பாஜகவை மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துவிடாமல் தடுப் பதே மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உள்ள முக்கிய சவால் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் இடை வெளி இருப்பதாக ஒரு தோற் றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குவதாகச் சாடினார்.

உண்மை அவ்வாறு இல்லை என்று குறிப்பிட்ட திருமாவளவன், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே நல்லிணக்கமான உறவு நீடித்து வருவதாக கூறினார். வதந்திகளால் அவதூறுகளால் எதிர்கட்சிகளின் உறவைச் சிதைக்க முடியாது என்றும், விடு தலைச் சிறுத்தைகளைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகி யவை இடம் பெறுகின்ற கூட்டணியில் இருக்கவே விரும்பு கிறது என்றும் தெரிவித்தார்.