அதிமுக அரசியல் நோட்டம்: நடிகர் அஜித்தை கவர பிறந்தநாள் வாழ்த்து

1 mins read

தமிழ்நாட்டில் திரைப்படம் சாராத முழுமை யான அரசியல்வாதிகள், அரசியலில் போட்டிபோட்டு வெற்றி பெறமுடியாது என்ற ஒரு நிலவரம் கடந்த 50 ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது என்றாலும் இப்போது அத்தகைய ஒரு நிலை இன்னும் மோசமாகி இருப்பதாகத் தெரிகிறது. அதிமுக தலைவி ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி இருவரும் ஓய்ந்து விட்ட நிலையில், பல திரைப்பட நடிகர் கள் ஆளுக்கொரு கட்சி தொடங்கி அரசியலில் குதித்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில், பழுத்த அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சிகள்கூட திரைப்பட கலைஞர்களைப் போட்டிபோட்டுக் கொண்டு வளைக்கத் தொடங்கியுள்ளன. இந்த முயற்சியில் முக்கிய எதிர்க் கட்சியான திமுக திக்குமுக்காடுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.