இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்ற 12 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பிடிபட்டவர்கள், 2005ல் இலங் கையைவிட்டு வெளியேறிய இலங்கை அகதிகள். இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது இந்தியாவுக்குச் சென்ற அந்த இலங்கை மக்கள், தமிழ்நாட்டில் இந்திய அரசாங்கம் அமைத்திருக்கும் முகாம்களில் இது நாள் வரையில் வாழ்ந்து வந்தார்கள். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து இருப்பதை அடுத்து இந்தியாவிலிருந்து அகதிகள் பலரும் இலங்கை திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்று இலங்கை கடற்படையிடம் சிக்கிய 12 பேர். படம்: இந்திய ஊடகம்

