சென்னை: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜா என்ற ரவுடியை போலிசார் சென்னையில் வைத்து கைது செய்தனர். கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ராக்கெட் ராஜா, நீண்ட நாட்களாக போலிஸ் கையில் சிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் தங்குவிடுதியில் தங்கி இருந்தபோது போலிசிடம் பிடிபட்டார். அவர் விடுதியில் இருப்பது குறித்து கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலிசார் துப்பாக்கி முனையில் அவரைக் கைது செய்தனர். அவருடைய கூட்டாளிகள் ஐவரும் கைதாகினர்.
போலிசில் சிக்கிய பிரபல ரவுடி: கூட்டாளிகள் ஐவர் கைது
1 mins read

