திருவண்ணாமலை: அவணியாபுரத்தைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவியான கார்த்திகாவின் தந்தை கடந்த ஆண்டு சாலை விபத்தில் காலமானார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய கார்த்திகா, தந்தை இறந்தபின் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் தன் தாய் கூலி வேலைக்குச் செல்வதாகவும் தானும் தன் சகோதரி, சகோதரனும் அரசுப் பள்ளியில் படிப்பதாகவும் கூறியிருந்தார்.
ஓராண்டு ஆகியும் தங்களுக்கு விபத்து நிவாரண உதவித் தொகை கிடைக்கவில்லை என்று கார்த்திகா முறையிட்டிருந்ததை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உடனடியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் விதவை உதவித் தொகையான ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் பெறுவதற்கான அனுமதி ஆணையையும் கார்த்திகாவின் தாயிடம் வழங்கி உள்ளார்.

