இழப்பீட்டுத் தொகையில் மோசடி: வழக்கறிஞர் வீட்டில் சோதனை

1 mins read

சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த, காயம் அடைந்தவர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் முறை கேடு செய்த வழக்கறிஞர் தமிழரசன் வீட்டில் சிபிசிஐடி போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நூறு பேரிடம் இருந்து அவர் தலா ரூ.2.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.30 கோடி அபகரித்ததாக புகார் எழுந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் இருந்து ஏற்கெனவே பெற்ற காசோலை மூலம் நூறு பேரின் வங்கிக் கணக்கில் இருந்தும் தலா ரூ.2.30 லட்சத்தை தன் வங்கிக் கணக்குக்கு மாற்றி மோசடி செய்துள்ளார் தமிழரசன் என்பது குற்றச்சாட்டு. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி தமிழரசன் வீட்டில் சிபிசிஐடி போலிசார் சோதனை நடத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg