மணல் கொள்ளையை தடுத்த காவலர் கொலை

மணல் கொள்ளையை தடுத்த காவலர் கொலை

1 mins read
84d5d8a8-53af-4566-9f2b-6a9fe9623cdc
-

நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலைமைக் காவலர் கொள்ளையர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணல் கொள்ளையை தடுக்க போலிசார் உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் சாடியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப் பட்டு வருகிறது. குறிப்பாக பாண்டிச்சேரி கிராமத்திற்கு அருகே மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத் தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஜெகதீஷ் துரைக்கு (32 வயது) நேற்று முன்தினம் இரவு நம்பியாற்றில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக தகவல் கிடைத் துள்ளது.

மணலில் சிக்கிய டிராக்டர். படம்: தமிழக ஊடகம்

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg