கர்நாடக அரசு காவிரியில் இருந்து இம்மாதத்தில் நான்கு டிஎம்சி நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிடவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், "கர்நாடக அணைகளில் நீர் இருப்புக் குறை வாக உள்ளது. எங்களது குடிநீர்த் தேவைக்கே போதிய நீர் இல்லை. ஆகையால், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கிறோம்," என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படவேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆயினும், மத்திய அரசு அதனை நிறைவேற்றவில்லை. இதையடுத்து, தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. தமிழக அரசின் மனுவை ஏற் றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இம்மாதம் 3ஆம் தேதிக்குள் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர் பான வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது.

