'மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு'

'மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு'

1 mins read

பெங்களூரு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், "மோடி அரசு மக்களை வஞ்சிக்கிறது," என்று குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் அடுத்த சில நாட்களில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பாஜகவும் காங்கிரசும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளைச் சேகரித்து வரு கின்றன. இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர் களிடம் பேசிய முன்னாள் பிரத மர் மன்மோகன் சிங், "வங்கித் துறை மோசடிகள் கடுமையாக அதிகரித்துள்ளன. செப்டம்பர் 2013ல் ரூ.28,416 கோடியாக இருந்த வங்கி மோசடி தொகை செப்டம்பர் 2017ல் 4 மடங்கு அதிகரித்து ரூ.1.11 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது," என்றார்.

"மோடி அரசின் பொருளியல் 'நிர்வாகச் சீர்கேடு' இந்த வார்த்தையை நான் மிகவும் எச் சரிக்கையுடன் பயன்படுத்து கிறேன். இத்தகைய சீர்கேடுகள் வங்கித்துறை மீது பொது மக்களுக்கு இருக்கும் நம்பிக் கையை மெல்ல மெல்லஅரித்து வருகிறது.