புதுவை: இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து காவல் துறை துப்பாக்கிச் சூடும் தடியடியும் நடத்தியதால் புதுவையில் பதற்றம் நிலவியது. அங்குள்ள தனியார் மருந்து தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தொழிற்சாலையால் சுற் றுச்சூழல் மாசடைவதாக பொது மக்கள் புகார் எழுப்பியுள்ள நிலை யில், அதை விரிவாக்கம் செய்ய அரசிடம் அனுமதி கோரியுள்ளது ஆலை நிர்வாகம். இதுதொடர்பாக தொழிற்சாலை அமைந்துள்ள காலாப்பட்டு பகுதி மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மேடையில் அமர்ந்ததும் தண்ணீர் குடித்தார். அப்போது பொதுமக்கள் அவரை நோக்கி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்காமல் தாங்கள் தினமும் பருகும் மாசடைந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். இதையடுத்து சல சலப்பு அதிகமானதால் ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறினர்.
போலிசாருடன் வாக்குவாதம் செய்யும் மக்கள். படம்: தகவல் ஊடகம்

