சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென் னையில் உள்ள தலைமைச் செய லகத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரண்டாயிரம் பேரை காவல்துறை கைது செய்தது. தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர் கள், ஆசிரியர்களின் கூட்டமைப் பான ஜாக்டோ-ஜியோ ஏற்கெ னவே அறிவித்திருந்தது. இதையடுத்து போராட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் முற்றுகைப் போராட்டத்துக்காக பல்வேறு பகு திகளில் இருந்து அரசு ஊழியர் களும் ஆசிரியர்களும் நேற்று சென்னையில் திரண்டனர். நூற் றுக்கணக்கானோர் சென்னை நோக்கி வருவதை அறிந்த போலிசார், பல்வேறு ஊர்களில் உள்ள பேருந்து, ரயில் நிலையங்களில் அரசு ஊழியர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
சாலை மறியல் செய்த ஆசிரியர்கள். படம்: சதீஷ்

