சீர்மிகு நகரங்கள் திட்டம்: சென்னை தியாகராய நகரில் அமையும் நடைபாதை வளாகம்

சீர்மிகு நகரங்கள் திட்டம்: சென்னை தியாகராய நகரில் அமையும் நடைபாதை வளாகம்

1 mins read

சென்னை: 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான தியாகராயநகரில் ரூ.33.80 கோடி யில் நடைபாதை வளாகம் அமைக் கும் பணி தொடங்கியது. சகல வசதிகளுடன் அமைய உள்ள நடைபாதை வளாகம் நகர்ப் புற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித் துள்ளது. நாடு முழுவதும் 100 'ஸ்மார்ட் சிட்டி' (சீர்மிகு நகரங்கள்) அமைக் கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந் தது. அதன் அடிப்படையில், பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தியாகராயநகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

"இந்த நடைபாதை வளாகத்தில் முதியோர்கள், குழந்தைகள், பாத சாரிகள் தங்குதடையின்றி நடக்க வும், மாற்றுத் திறனாளிகளின் சக் கர நாற்காலிகள் எளிதில் செல்ல வும் ஏதுவான தொடர்ச்சியான நடைபாதை அமைக்கப்படுகிறது. "இதில் சிறுவர் விளையாட்டு பகுதி, மேம்படுத்தப்பட்ட கழிப் பிடங்கள், பொதுமக்கள் இளைப்பா றுவதற்கு வசதியான இருக்கைகள், தேவையான இடத்தில் அலங்கார விளக்குகள், கலைநயமிக்க சிலை கள், நீரூற்று மற்றும் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு தக்க இடைவெளியில் வழித்தடம் அமைத்தல் உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள்," என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.