தோஷம் கழிப்பதாக நகைகள் கொள்ளை: 84 வயது முதியவர் கைது

தோஷம் கழிப்பதாக நகைகள் கொள்ளை: 84 வயது முதியவர் கைது

1 mins read

சென்னை: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்து நகை களைத் திருடி வந்த 84 வயது முதியவர் கைதானார். சில்வர் சீனிவாசன் என்ற அந்நபர், வீட்டில் உள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களை எடுத்து வரச் செய்து பூசை செய்வது போல் நடிப்பார். பெண்கள் அசந்த நேரத்தில் நகைகளை எடுத்துக் கொண்டு நழுவி விடுவார். இவர் ஏற்கெனவே பலமுறை சிறை சென்றுள்ளார். இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியில் நீண்ட நேரமாக சாலையோரத்தில் அமர்ந்திருந்த இவர் மீது சந்தேகம் கொண்டு போலிசார் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் விசாரணை தீவிரமடைந்தது. இதையடுத்து அவரது ஏமாற்று வேலை அம்பலமானது.