கழிவறையில் 40 கிலோ தங்கம்: விமான நிலையத்தில் பரபரப்பு

கழிவறையில் 40 கிலோ தங்கம்: விமான நிலையத்தில் பரபரப்பு

1 mins read

சென்னை: கழிவறையில் கேட்பாரற்றுக் கிடந்த 40 கிலோ தங்கக்கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.12.60 கோடி எனத் தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையை அடுத்து இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நீடித்து வருகிறது. இந்தச் சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.