சேலத்தில் மாம்பழங்களின் விலை அதிகரிப்பு

1 mins read
29bcb065-d7ff-4b01-a970-05400f7628c8
-

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட சேலம் சந்தையில் மாம்பழங்கள் விலை 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வழக்கமாக சேலம் மாவட்டத்திற்கு அதிக அளவில் மாம்பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். ஆனால் இந்த ஆண்டு அந்த பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டை விட குறைவாக சேலத்திற்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. படம்: தமிழக தகவல் ஊடகம்