கேரளாவில் இரட்டை கொலை; பாஜக அலுவலகத்தில் தீ வைப்பு

கேரளாவில் இரட்டை கொலை; பாஜக அலுவலகத்தில் தீ வைப்பு

1 mins read

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த இரட்டை கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட கண்டன பேரணியில் திடீரென ஏற்பட்ட வன்முறையில் பாஜக அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. கேரள மாநிலம் கண்யூர் மாவட்டம் தலச்சேரியை அடுத்த பள்ளூரைச் சேர்ந்தவர் பாபு (வயது 47). மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். புதுச்சேரி அருகில் உள்ள மாகி நகரில் கவுன்சிலராக இருந்த இவரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொன்றனர்.

இவரது கொலை நடந்த சில மணி நேரங்களில் அதே பகு தியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர் வாகி, பாஜக கட்சியின் தொண்டரு மான சமேஜ் (43) என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து இரு கட்சியினரும் நேற்று முன்தினம் கண்ணூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் இரு கட்சியினரும் மாகியில் தனித்தனியாக கண்டன பேரணி நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் மாகி பாஜக கட்சி அலுவல கம் தீ வைத்துக் கொளுத்தப்பட் டது.