பெங்களூரு: பெங்களூருவில் கைப்பற்றப்பட்ட போலி வாக்காளர் அடையாள அட்டை குறித்து தேர் தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுமார் 10,000 போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஜலஹல்லி பகுதியில் மஞ்சுளா நஞ்சாமூரி என்பவருக்கு சொந்தமான அடுக் குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இக்குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து போலி வாக்காளர் அட்டைகளை நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி னர்.
அதனுடன் 5 மடிக்கணினி களும் அச்சு இயந்திரம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து பேசிய கர்நாடகத் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார், விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத் தொடர்ந்து பாஜகவும் காங்கிரசும் நள்ளிரவில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப் பில் ஒருவரையொருவர் சாடினர். அப்போது, அந்த வீடு காங் கிரஸ் நிர்வாகிக்குச் சொந்தமா னது. எனவே காங்கிரஸ்தான் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாஜக புகார் கூறியது. மேலும் அந்தத் தொகு தியில் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் பாஜக சார்பில் புகார் அளிக்கப் பட்டது.

