அரிய செம்பு; கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் கைது

2 mins read
d26a4fb0-3c8c-42e5-9f43-a03d087a1a92
-

புதுடெல்லி: அறிவியல் ஆராய்ச்சிக் காக பயன்படுத்தக் கூடிய அரிய செம்புத் தகடு என்று கூறி, சாதாரண செம்புத் தகட்டைக் கொண்டு ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த தந்தை, மகன் கைதாகினர். விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் மோகன் ஆகிய இருவரும் மோட்டார் மெக் கானிக் எனப்படும் இயந்திர வல்லு நராக உள்ளனர். டெல்லி தொழிலதிபர் ஒருவரி டம், "பல இயற்பியல் தன்மை களைக் கொண்டுள்ள அரிய வகை செம்புத் தகடு தங்களிடம் உள்ளது எனவும் நாசாவில் மட் டுமே அது பயன்படுத்தப்படும்," எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அதை தன்னிடம் இருந்து வாங்கி நாசாவிற்கு விற் றால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தொழிலதிபர் நம்ப வேண்டும் என்பதால், அரிசியை அந்தத் தகடு ஈர்ப்பது போல சில வித்தை களைக் காண்பித்து எளிதாக அவரை மயக்கி விட்டனர். மேலும் நாசாவுக்கு விண்வெளி உடைகள், வேதியல் பொருட்களை தாங்களே தயாரித்து அனுப்புவதாக வும் கூறி போலியான ஒரு விண் வெளி உடையையும் காட்டியுள்ளனர்.

மோசடி பேர்வழிகளின் வித்தை களில் மயங்கிய தொழிலதிபர், பல்வேறு கட்டமாக ரூ.1.43 கோடி பணத்தை கொடுத்துள்ளார். நாசாவிற்கு அனுப்புவதற்கு முன்னர் பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி பலமுறை அவரிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். கடைசியில் தான் ஏமாற்றப்படு வதை உணர்ந்த அவர் போலிசில் சென்று புகாரளிக்கவே, தற்போது தந்தையும் மகனும் கைது செய்யப் பட்டனர்.

மோசடியில் ஈடுபட்ட தந்தையும் மகனும் கைதாகினர். படம்: ஊடகம்