தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தையை கடத்த வந்ததாக சந்தேகம்: மலேசிய தமிழர்கள்

1 mins read

இருவர் உட்பட ஐவர் மீது தாக்குதல்; தி.மலை: ஜோதிடர் ஒருவர் அறிவுறுத்தலின்படி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த மலேசியாவைச் சேர்ந்த இருவர் மற்றும் அவரது உறவினர்களை குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என சந்தே கித்து கிராம மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் என்ற அந்த 65 வயது மூதாட்டி கணவர் இறந்துவிட்டதால் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் இவரது உறவினர்களான மலேசி யாவைச் சேர்ந்த மோகன்குமார் (43 வயது), சந்திரசேகரன் (47 வயது) ஆகியோர் சில தினங் களுக்கு முன் தமிழகம் வந்தனர்.

பல கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்த அவர்கள் இருவரும் ருக்மணி அம்மாளை யும், அவரது மருமகன் மற்றும் மற்றொரு உறவினரான வெங்க டேசன் என்பவரையும் தங்களுடன் பயணத்தில் இணையுமாறு கேட்டுள்ளனர். நேற்று முன்தினம் அனைவரும் வாடகைக் காரில் திருவண்ணா மலை சென்றிருந்தனர். வழியில் போளூர் பகுதியில் அமைந்துள்ள கோவிலை தரிசனம் செய்வதற்காக நின்றனர். அப்போது அங்குள்ள வீட்டிற்கு வெளியே நின்றிருந்த குழந் தையைக் கண்ட மோகன்குமார் மலேசியாவில் இருந்து கொண்டு வந்த சில இனிப்புகளைக் கொடுத்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மோகன்குமார் உள்ளிட்டோரை குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகித்துள்ளனர்.