ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிட்ட ஜெம்: நெடுவாசலில் மகிழ்ச்சி

ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிட்ட ஜெம்: நெடுவாசலில் மகிழ்ச்சி

1 mins read

புதுக்கோட்டை: நீண்ட போராட்டத் தின் எதிரொலியாக நெடுவாசல் பகுதியில் செயல்படுத்தப்பட இருந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தை கர்நாட காவைச் சேர்ந்த ஜெம் நிறுவனம் மத்திய அரசின் ஆதரவோடு செயல்படுத்த இருந்தது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ஒப்பந்தம் குறித்து தகவல் வெளியானதும், நெடு வாசல் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் வெகு வாக பாதிக்கப்படும் என பொது மக்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால் திட்டத்தை செயல் படுத்துவதற்கான ஆயத்தப் பணி கள் துவங்கி, தொடர்ந்து நடை பெற்று வந்தன. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு விதமான போராட்டங்கள் நடை பெற்றன. இதனால் தமிழகத்தில் இத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு அனுமதி தர மறுத்தது.