"தமிழகத்தின் கடன்சுமை வெகுவாக அதிகரித்துவிட்டது"

"தமிழகத்தின் கடன்சுமை வெகுவாக அதிகரித்துவிட்டது"

1 mins read

சென்னை: தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும், வளர்ச்சியில் 15 ஆண்டுகள் பின்தங்கி இருப்பதாகவும் இந்திய வர்த்தக சம்மேளனம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் குறிப்பிட்டார். "வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அரசியலில் தொடர்வேன். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் எளிதில் தீர்க்கக் கூடியது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் சிலர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். உரிமைகளைப் பெற நிச்சயம் போராடித் தான் ஆக வேண்டும். "சினிமாவில் நிறைய சாதித்து விட்டேன். இனி அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். மீதமிருக்கும் என் வாழ்வை பொது மக்களுக்காக செலவிட உள்ளேன்," என்றார் கமல்ஹாசன்.