விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலி: போதையில் கார் ஓட்டியதாக தகவல்

விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலி: போதையில் கார் ஓட்டியதாக தகவல்

1 mins read
a251ad87-6c40-4e7a-ad18-5993dd75f455
-

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதி யதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அவர்களில் எட்டுப் பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் கோடை விடு முறையைக் கழிக்க குடும்பத்துடன் கொடைக்கானல் செல்ல முடிவு செய்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் பிற்பகலில் மோகன் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் உற வினர்களுடன் சென்னையிலிருந்து வாடகைக் காரில் கொடைக்கானல் நோக்கிச் சென்றார். நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் அந்த கார் பெரம்பலூர் அருகே திருச்சி=சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திருச்சியிலிருந்து கடலூர் மாவட்டம் பென்னாடம் நோக்கி தனியார் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

சக்தி சரவணன் என்பவர் அந்த காரை ஓட்டிச் சென்றார். பெரம்பலூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நடுவில் இருந்த சாலைத் தடுப்பில் மோதி யதைத் தொடர்ந்து தூக்கிவீசப்பட்ட கார் எதிரே வந்துகொண்டிருந்த வாடகைக் கார் மீது மோதியது. பலமாக மோதியதன் விளை வாக வாடகைக் கார் நொறுங்கியது. மோகன் குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள், மூன்று பெண் கள் உட்பட எட்டுப் பேரும் வாடகைக் கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று சாலை நடுவே உருக்குலைந்து காணப்பட்டது. படம்: தமிழக ஊடகம்