சென்னை: சென்னையில் போக்கு வரத்து விதிகளை மீறுபவர்களி டம் இருந்து அபராதத்தை ரெக் கமாக வசூலிக்கும் முறை அடி யோடு ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறும் வாகனமோட்டி கள் இனி மின்னணு முறையில் மட்டுமே அபராதத்தைச் செலுத்த முடியும். போக்குவரத்து குற்றங்களுக் கான அபராதத்தை 'ஸ்பாட் ஃபைன்' முறைப்படி ரொக்கமாகச் செலுத்தும்போது அது காவல ருக்கு வழங்கப்பட்ட கையூட்டா அல்லது உண்மையான அபராதத் தொகையா என்பதில் சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. தவறிழைக்கும் வாகனமோட்டி களை போக்குவரத்து காவலர்கள் துரத்தி அல்லது மறித்துப் பிடிக் கும்போது அசம்பாவிதங்களும் நடைபெற்றுள்ளன. அத்தகைய சம்பவங்களில் போக்குவரத்து காவலர்களுக்கும் பொது மக் களுக்கும் இடையே தகராறுகள் நடந்துள்ளன. சில நேரங்களில் வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியுள்ளது.
விதிமீறும் வாகனமோட்டிகளை வேட்டையாடும் போக்குவரத்து போலிசார். கோப்புப் படம்

