சசிகலா திடீர் நோட்டீஸ்: அதிர்ச்சியில் திவாகரன் தரப்பு

1 mins read
dd2998f5-b6be-46d0-aba3-3741bd872241
-

சென்னை: தம்முடைய சகோதரர் திவாகரன் அண்மைக்காலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல் வத்துக்கு ஆதரவாகச் செயல்படு வதாக சசிகலா தெரிவித்துள்ளார். எனவே தமது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டு தமது வழக்கறிஞர் மூலம் திவாகரனுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவருக்கும் சாதகமா கவும் அவர்களது துரோகச் செயல்களை மறைக்கும் விதமாக வும் திவாகரன் செயல்படுவதாக அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட் டுள்ளது என தமிழக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. "கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து பத்திரிகைகள், காணொளிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தவறான விஷயங்களை பேட்டிகள் மூலம் தெரிவித்து வருவதால் இந்தச் சட்ட அறிவிப்பில் அவற்றைக் குறிப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது," என சசிகலா சார்பாக அனுப்பப்பட்டுள்ள நோட் டீசில் அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

"என் கட்சிக்காரர் (சசிகலா) பற்றி 'இருட்டறையில் இருக்கின் றார்', 'எதுவுமே அவருக்குத் தெரியாது', 'அரசியல் அனுபவம் அவருக்கு இல்லை', 'இனிவரும் காலங்கள் அவர் பொதுச்செயலா ளராய் செயல்படமாட்டார், எல்லாம் முடிந்துவிட்டது', 'கட்சியில் தற் போது நடப்பது எதுவுமே அவ ருக்குத் தெரியாது', 'தினகர னின் செயல்பாடுகளில் சசிகலா வுக்கு உடன்பாடு இல்லை' என தாங்கள் பேட்டிகளின் வாயிலாக பலவாறு விமர்சிப்பது, தங்களின் வயதுக்கும், குடும்ப பின்னணிக் கும் தகுதியானதல்ல," என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப் பட்டுள்ளது.