சென்னை: காவிரி பிரச்சி னையில் பாஜக உட்பட எந்த தேசிய கட்சியையும் தமிழக அரசு நம்பவில்லை என்றும், உச்ச நீதி மன்றத்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். "காமராஜருக்குப் பிறகு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என அரசியல் நோக்கர்கள் கூறினர். அண்ணா அதை நிரப்பினார். அவருக்குப் பிறகு, வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என்றனர். ஆனால் கருணாநிதி முதல்வரானார். "பின்னர் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் முதல்வராகினர். தற்போது எடப்பாடி முதல்வராக உள்ளார். எனவே தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை," என்றார் தம்பிதுரை.
வெற்றிடம் இல்லை: தம்பிதுரை திட்டவட்டம்
1 mins read

