இயக்குநர் பாரதிராஜா மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு

இயக்குநர் பாரதிராஜா மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு

1 mins read

சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் விநாயகர் என பேசியதாக காவல் துறையில் இந்து மக்கள் முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பாரதிராஜா கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாக அவர் பேசியதாகவும் ஆயுதம் எடுப்போம் என குறிப்பிட்டதாகவும் இந்து முன்னணியினர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் வடபழனி போலிசார், மத நம்பிகைகளுக்கு எதிராக மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசியது, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.