உலக நன்மைக்காக ஊரே திரண்ட விழா

உலக நன்மைக்காக ஊரே திரண்ட விழா

1 mins read
1b73d47e-afd8-455e-a048-c5e4ef994cbd
-

உலக நன்மைக்காகவும் மழைபொழிய வேண்டியும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் 14 கிலோ மீட்டர் மலையைச் சுற்றி தீர்த்தக்குடம் எடுத்த சுவாரசியமான விழா ஈரோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னிமலையில் மலைமேல் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற அக்னி நட்சத்திர விழாவுக்காக சப்த நதிகள் என்று சொல்லப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மேலும், சுற்றுப்புறத் திலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமக் கோயில் கிணறுகளில் இருந்தும் குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்தனர். படம்: தமிழக ஊடகம்