கத்தி முனையில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி: இருவர் கைது

கத்தி முனையில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி: இருவர் கைது

1 mins read

சென்னை: கல்லூரி மாணவி ஒருவரை கத்தியைக் காண்பித்து மிரட்டி ஆட்டோ ஓட்டுநரும் அவ ரது நண்பரும் கடத்திச் சென்றது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியைச் சேர்ந்த தேவரா ஜின் மகள் கீதா (20 வயது) சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி மாலை ஷேர் ஆட்டோ ஒன்றில் அவர் பயணம் செய்தார். சிறிது தூரம் சென்றதும் மற்ற பயணிகள் இறங்கிவிடவே கீதா வும் இன்னொரு இளைஞரும் மட்டுமே ஆட்டோவில் இருந்தனர். இந்நிலையில், வழக்கமான பாதையில் செல்லாமல் அந்த ஆட்டோ வேறு திசையில் சென்ற தால் கீதாவுக்கு சந்தேகம் ஏற்பட் டது. இது குறித்து அவர் கேட்ட போது, ஆட்டோ ஓட்டுநர் கூறிய விளக்கம் திருப்திகரமாக இல்லை. சந்தேகம் வலுத்ததால் பயந்து போன கீதா, தன்னை உடனடியாக அதே இடத்தில் இறக்கிவிடுமாறு கூற, ஆட்டோ நிற்காமல் சென்றது.

இதனால் கீதா உதவி கேட்டு கூக்குரல் எழுப்ப, அருகில் இருந்த இளைஞர் திடீரென அவரது வாயைப் பொத்தி, 'கத்தினால் கொலை செய்துவிடுவோம்' என்று கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.