நவாஸ் ஷெரீப்: மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானே காரணம்

நவாஸ் ஷெரீப்: மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானே காரணம்

1 mins read
2dd3b232-b588-46e2-b2cf-1ce5e5ea18ad
-

இஸ்லாமாபாத்: மும்பையில் வெடி குண்டு தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங் கரவாதிகள்தான் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பைக்குள் ஊடுருவிய 10 பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் இதற்கு ஜமாத் உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீது மூளையாகச் செயல்பட்டார் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில் இத்தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் நடத்தினர் என்பதை உறுதி செய்ய ஆதாரங்கள் இருப்பதாக வும் மத்திய அரசு கூறியது.