பெற்றோரைப் பராமரிக்காத வாரிசுகளுக்கு 6 மாத சிறை

பெற்றோரைப் பராமரிக்காத வாரிசுகளுக்கு 6 மாத சிறை

1 mins read

புதுடெல்லி: குழந்தைகளைப் பெற்று வளர்த்து அவர்களை ஒரு நல்ல நிலையில் அமரச் செய்யும்வரை நாங்கள் படும் பாடு சொல்லி மாளாது என்பர் பல பெற்றோர். இப்படி பாடுபட்ட பெற்றோரை வயதான காலத்தில் பராமரிக்காமல் கைவிடும் அல் லது கொடுமைப்படுத்தும் வாரிசு களுக்கு 6 மாத சிறைத் தண் டனை விதிக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. அண்மையில், 2018ஆம் ஆண்டிற்கான பெற்றோர் நலம், மூத்த குடிமக்கள் சட்டம் குறித்த மசோதாவை மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறைக்கான அமைச்சு தயாரித்துள்ளது.

இந்த அமைச்சகத்தின் சார்பில் நடந்த ஆய்வுக்கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சக அதிகாரிகள் விவரம் வெளியிட்டுள்ளனர். "பெற்றோர் பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.10,000 அளிக் கப்பட வேண்டும். அதேவேளை யில் பெற்றோரைப் பராமரிக்காமல் கைவிடுபவர்களுக்கு வழங்கப் படும் சிறைத் தண்டனையை மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.