சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சி: உள்ளே புகுந்த ஆறடி நீள பாம்பு

சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சி: உள்ளே புகுந்த ஆறடி நீள பாம்பு

1 mins read

கரூர்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் திடீரென ஆறு அடி நீள பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் நிகழ்வரங்கில் கூடியிருந்த பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நேற்று முன்தினம் கரூரில் நடைபெற்ற, பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து கொண்டார் தம்பிதுரை. நிகழ்ச்சி தொடங்க இருந்த போது அந்த அரங்குக்குள் திடீரென 6 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது. இதையடுத்து அதிகாரிகளும் பொது மக்களும் பீதியில் ஆழ்ந்தனர். இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அந்த பாம்பை சில நிமிடங்களில் பிடித்தனர். அது எந்தவித ஆபத்தும் விளைவிக்காத சாரைப் பாம்பு என்று அவர்கள் தெரிவித்தனர்.