புதுடெல்லி: தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தக் கடைகளை மூட வேண்டும் என அண்மையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தமிழக அரசின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மதுக்கடைகளை மூட உத்தரவு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
1 mins read
-

