காவிரி மேலாண்மை வாரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காவிரி மேலாண்மை வாரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

1 mins read
654a0375-a084-4351-9844-0b030791a8cb
-

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவுத் திட்டத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உரை ஒன்றில் வைத்து மத்திய அரசு வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. இந்த வரைவுத் திட்டமானது உச்ச நீதிமன்ற நீதிபதியின் பார் வைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசா ரணை நாளை நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர் பாக தமிழக, கர்நாடகா அரசுகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தமிழகத்துக் குரிய தண்ணீரைத் தர கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் இதுவரை வாரியம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் வாரியம் அமைப் பது தொடர்பான வரைவுத் திட் டத்தைத் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அடுத்த உத்த ரவைப் பிறப்பித்தது. அதன்படி, மத்திய அரசு வரைவுத் திட்டத்தை நேற்று தாக்கல் செய்தது.