தலைகீழாகக் கவிழ்ந்த வேன்: 6 பேர் பலி; 16 பேர் படுகாயம்

தலைகீழாகக் கவிழ்ந்த வேன்: 6 பேர் பலி; 16 பேர் படுகாயம்

1 mins read

விருதுநகர்: நெடுஞ்சாலையில் வேன் தலைகீழாகக் கவிழ்ந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் சாத்தூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. மா தா ங் கோ வி ல் ப ட் டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஒரு வேனில் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்த பின்னர் அனைவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

தாயில்பட்டி ராமசந்திரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது வேன் டயர் திடீரென வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரப் பள்ளத்தில் தலை கீழாகக் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில் வேன் இடு பாடுகளில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார் காயமடைந்தவர் களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. இதற்கிடையே இந்த விபத்து குறித்து சாத்தூர் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.