ராமநாதபுரம்: துப்புரவுப் பணிக்காக துபாய் அழைத்துச் செல்லப்பட்டவர் கள் அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக புகார் எழுந்துள் ளது. இதையடுத்து அவர்களை மீட்கவேண்டும் என குடும்பத் தாரும் உறவினர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 25 முதல் 39 வயதுக்குட்பட்ட 7 ஆட வர்கள் முகவர் ஒருவர் மூலம் சில மாதங்களுக்கு முன் துபாய் சென்றனர். இதற்காக தலா ரூ.65 ஆயிரம் பணமும் அளித்துள்ளனர். துபாயில் மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என்று முகவர் கூறியதை நம்பி கனவுகளுடன் அங்கு சென்ற ஏழு பேருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. முகவர் சொன்னபடி ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், சரி வர உணவும் வழங்கப்படாததால் 7 பேரும் பசி தணிக்க தண்ணீரை மட்டுமே குடித்து சமாளித்து வந்துள்ளனர்.
துபாயில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் 7 தமிழர்கள்; மீட்கக் கோரும் உறவினர்கள்
1 mins read
-