சென்னை: ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகரை தமிழகக் காவல்துறை இதுவரை கைது செய்யாதது ஏன்? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக வெளியிட் டுள்ள அறிக்கையில், சவால் விடும் அவரை உடனே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்த நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
"தலைமறைவான எஸ்.வி.சேகர் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தும் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டதோடு, நீதிபதியும் அவரைக் கடுமையாக சாடி உள்ளார். "இந்தச் சூழ்நிலையில் அவர் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித் துள்ளார்," என்று கி.வீரமணி சுட்டிக்காட்டி உள்ளார்.

