மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை: தினகரன் வலியுறுத்து

மதிப்பெண் கிடைக்க நடவடிக்கை: தினகரன் வலியுறுத்து

1 mins read

சென்னை: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை சுமார் 25,000 மாணவர்கள் தமிழ்மொழியில் எழுதியுள்ளதாகவும் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் 66 பிழைகள் இருந்ததாகக் கூறப்படுவதாகவும் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு தவறுகளுடன் கேட்கப்பட்ட கேள்விகளால் மட்டும் தமிழக மாணவர்க ளுக்கு 196 மதிப்பெண்கள் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். "இப்படி பாதிக்கப்படுமானால் தமிழ்மொழியில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு குறைவு. எனவே, இந்தத் தவறான கேள்விகளுக்கான முழு மதிப்பெண்கள் தமிழக மாணவர்களுக்கு கிடைக்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று தினகரன் வலியுறுத்தி உள்ளார்.