தொண்டர்களைக் கண்டித்த உதயநிதி

தொண்டர்களைக் கண்டித்த உதயநிதி

1 mins read

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைப்போன்று தம்மைச் சித்திரித்துப் பதாகைகள் வைத்த தொண்டர்களைக் கடுமையாகக் கண்டித்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் தவறு செய்துவிட்டதாகக் குறிப்பிட்டார். "அந்தத் தொண்டர்களை அழைத்து நான் கடுமையாகக் கண்டித்ததோடு, அந்தப் பதாகைகளை நீக்கும்வரை அவர்களது பகுதிக்கு நான் வரமாட்டேன் என்று சொல்லி இருக்கிறேன். என் தந்தை, பாட்டனாருடன் ஒப்பிடும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை. இது எனக்கும் நன்றாகத் தெரியும்," என்றார் உதயநிதி.