உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வெளுத்துக்கட்டிய கோடை மழை

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வெளுத்துக்கட்டிய கோடை மழை

1 mins read

சேலம்: கோடை வெயிலின் தகிப்பால் சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செங்கோடு, விருதுநகர், தேனி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, அடுத்தகட்டமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நேற்றும் மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.