தமிழ் வேட்பாளர்கள் தோல்வி

தமிழ் வேட்பாளர்கள் தோல்வி

1 mins read

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக போட்டியிட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் (1), மஜத (1), இந்திய குடியரசுக் கட்சி (4), சிபிஎம் (1), அதிமுக (4), ஆம் ஆத்மி (2) உள்ளிட்ட கட்சிகள் சார்பாகவும் சுயேச் சையாகவும் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் சார்பில் மேயர் சம்பத் ராஜ், சி.வி.ராமன் நகரிலும் மஜத சார்பில் கோலார் தங்கவயலில் மு. பக்தவசலம், இந்திய குடியரசுக் கட்சியின் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தோல்வி கண்டனர். இதுதவிர அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர் களும், ஆம் ஆத்மி கட்சியின் 2 வேட்பாளர்கள், கோலார் தங்கவயலில் போட்டியிட்ட 11 தமிழ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.