குமாரசாமி: எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி

குமாரசாமி: எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி

1 mins read
af7666ca-ee46-4d0d-8b74-95f6cc639571
-

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில், ஜேடிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் இழுப்பதற்கு தலைக்கு நூறு கோடி ரூபாயும் அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாஜக வலைவிரிக்கிறது என்று மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர் தலில் 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் இருந்தால் போது மானது.

ஆதலால், காங்கிரஸ், ஜேடிஎஸ் சட்ட மன்ற உறுப்பினர் களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காங் கிரஸ், ஜேடிஎஸ் கட்சித் தலை வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு ஏற்றார்போல் நேற்று காலை நடந்த காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு 78 பேரில் 66 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். 12 பேரைக் காணவில்லை என்றும் ஜேடி எஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் இருவ ரைக் காணவில்லை என்றும் கூறப் பட்டது. பின்னர் விமானத் தாமதத் தால் அவர்கள் கூட்டத்திற்குத் தாமதமாக வந்தது தெரியவந்தது. இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப் போது பாஜக மீது குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் எச்.டி. குமாரசாமி. படம்: ஏஎன்ஐ