கோவை: இரு வேறு விமானங்களில் வந்த பயணிகளிடமி ருந்து 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த உனைஸ் என்ற இளையரின் உடைமைகளைச் சோதனை யிட்டபோது, சுமார் 3 கிலோ எடையுள்ள 52 தங்கக் கட்டிகளை அவர் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் இலங்கையிலிருந்து கோவை வந்த விமானத்தில் பய ணம் மேற்கொண்ட 7 பயணிகளிடமிருந்து 2040 கிராம் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும்.
கோவை விமான நிலையத்தில் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
1 mins read

