மனு அளிக்க வந்த விவசாயிகள் கைது

மனு அளிக்க வந்த விவசாயிகள் கைது

1 mins read
9f1f377b-1b02-4342-886f-2947bb90e091
-

பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளிக்க நாகை விவசாயிகள் நேற்று முன்தினம் சென்றனர். மேலும், கடலில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் போராட்டத் தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் விவசாயிகளைக் கைது செய்ய முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து 275 பேர் கைது செய்யப்பட்டனர். படம்: தமிழக தகவல் ஊடகம்