'மேலாண்மை வாரிய வரைவுத் திட்டத்தில் மாற்றங்கள் செய்க'

1 mins read

புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீட்டு அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் எனப் பெயர் வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று காவிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேலாண்மை வாரியத்தின் தலை மையகம் டெல்லியில் தான் இருக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த வரைவுத் திட்டத்தின் நகல் தமிழகம், கர்நாடகா, புதுவை அரசுகளுக்கு வழங்கப்பட்டது. வரைவுத்திட்ட அறிக்கையில் நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப் படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் கொண்ட அந்தக் குழுவில் மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரி விக்கப்பட்டுள்ளது. அந்த அமைப் பின் அதிகார வரம்புகள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.