கோவில் சிலை முறைகேடு: தீவிரமடைந்த விசாரணை

கோவில் சிலை முறைகேடு: தீவிரமடைந்த விசாரணை

1 mins read

பழனி: பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கான சிலையை வடிவமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது ஆன்மிக அன்பர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. இம்முறைகேடு தொடர் பாக சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா, அப்போ தைய கோவில் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இம் முறைகேட்டில் அறநிலையத் துறை நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்ட இரு வருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இருவரும் கைதாகினர். இதையடுத்து சிலை கடத்தல் பிரிவு தலை வரான பொன்மாணிக்கவேல் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தார். இதன் பலனாக கடந்த 2004ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகப் பணிபுரிந்த தனபாலன் என்பவருக்கும் சிலை முறைகேட்டில் தொடர்புள்ளது அம்பலமா னது. விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டும் அவர், இதுவரை நேரில் முன்னிலையாகவில்லை. இதையடுத்து அவர் கைதாக வாய்ப்புள்ள நிலை யில், தமக்கு முன்பிணை கோரி உயர்நீதிமன்ற கிளையை அணுகியுள்ளார் தனபாலன். போலிசாரும் விசாரணையைத் தீவிரப் படுத்தி உள்ளனர்.