மலேசிய மணலின் தரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மலேசிய மணலின் தரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 mins read

புதுடெல்லி: மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட் டுள்ள மணலின் தரத்தை ஆய்வு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக அர சுக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் தற்போது கடும் மணல்தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கட்டுமானப் பணிகள் நிலைகுத்தியுள்ளன. இந்நிலையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை யடுத்து அம்மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது.

இதனால் மணலை இறக்குமதி செய்த நிறுவனம் உச்ச நீதிமன் றத்தை அணுகியது. இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், இறக்குமதி செய்யப் பட்ட 55 ஆயிரம் டன் மணலின் தரம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். மணல் அள்ள எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் அள்ள அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அங்கு 5 இடங்களில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ள போலிசாரின் பாதுகாப்புடன் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அழியா நிலை கிராம மும் ஒன்று. இந்நிலையில் நெடுவாசல் போராட்டத்தைப் போலவே, அழியா நிலை கிராமத்தில் மணல் அள்ளக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நெடுவாசலில் ஹைட்ரோ கார் பனுக்கு எதிராக ஆலமரத்தடியில் போராட்டம் தொடங்கி, பின்னர் வலுவடைந்தது. அதேபோல் அழியா நிலை கிராமத்திலும் துவங்கிய போராட் டத்தில் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.