பன்னீர்செல்வம் தெரிவித்த வாழ்த்து; கேள்விகளை அடுக்கும் ப.சிதம்பரம்

பன்னீர்செல்வம் தெரிவித்த வாழ்த்து; கேள்விகளை அடுக்கும் ப.சிதம்பரம்

1 mins read

சென்னை: கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் வெற்றியை 'தென் மாநிலங்களில் பிரம்மாண்ட நுழைவு' என துணை முதல் வர் பன்னீர்செல்வம் வரவேற்றிருப்பது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் பழனிசாமியை நீக்கிவிட்டு, தன்னை முதல்வராக நியமிக்க ஓபிஎஸ் விண்ணப்பம் போடுகிறாரா என்றும் அறிக்கை ஒன்றில் நையாண்டியாக அவர் குறிப்பிட்டுள்ளார். "இந்தி திணிப்பை வரவேற்கிறாரா அல்லது காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பை வரவேற்கிறாரா?" என்றும் பன்னீர்செல்வத்துக்கான கேள்விகளை ப.சிதம்பரம் அடுக்கியுள்ளார்.